search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்ல திருமண விழா"

    • முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடைபெற்றது.
    • உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ராதிகா, உங்கள் பிரகாசமான புன்னகை என்றும் மறையாது. ஆனந்த், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அதே அன்புடனும் கருணையுடனும் ராதிகாவைத் தொடர்ந்து அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள் விரைவில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சி நடந்தது.
    • பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து நேற்றும், இன்றும் திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    மேலும், 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், நடிகைகள் மாதுரி தீட்சித், ஹேமமாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லீ, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியுடன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாக்கள் நிறைவு பெறுகின்றன.

    • மதுரை செக்கானூரணியில் ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடந்தது.
    • ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    மதுரை

    செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி குரூப்ஸ், மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நாகேந்திரன் என்.பிரபா ஆகியோரின் மகன் முகேஷ்ராஜூவிற்கும் மதுரை பை-பாஸ் துரைச் சாமி நகரைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன்- பிரேமலதா மகள் யாமினி ஆகியோரது திருமணம் நாகமலை புதுக் கோட்டை நான்கு வழிச் சாலை அருகே உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், தொழிலதி பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள், உறவி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற் பாடுகளை செக்கானூரணி ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ் மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    முன்னதாக திருமணத்தையொட்டி ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறு சுவை உணவு வழங்கப்பட்டது.

    • எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.
    • மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் சுசூகி மற்றும் நிஸான் நிறுவனங்களின் நிறுவனர் ஆல்வின்-ஜெயஷீலா ஆல்வின் தம்பதியரின் மகள் டாக்டர் ரித்து ஆல்வின், சென்னை வேட்டு விஷன் இந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரி ஜெயசிங்- அம்பத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை மார்கிரட் ேஜாஸ்பின் தம்பதியரின் மகன் டாக்டர் மேஷாக் ஜெயசிங், இவர்களது திருமணம் நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. சபை தேவாலயத்தில் சி.எஸ்.ஐ. பேராயர் பேரருட்பணி செல்ைலையா தலைமையில் திருமண ஆராதனை தொடர்ந்து கோட்டாறு பறக்கை சந்திப் பில் அமைந்துள்ள எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.

    திருமண விழாவில் ெதாழிலதிபர்கள், நிஸான் மற்றும் சுசூகி நிறுவனங்களின் அதிகாரிகள், அலு வலர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.

    திருமண விழா நிகழ்சசி ஏற்பாடுகளை மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.

    • எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா இன்று நடந்தது.
    • அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    திருமண விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்கள் வெண்ணிலா (எ) மீனா-மகேஷ் கிருஷ்ணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்பட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் சுப்புலட்சுமி எஸ்ஸார் கோபி, காளிராஜன், சாந்தி தேவி, முருகையா பாண்டியன், வெள்ளையம்மாள்,

    வில்லாபுரம் பகுதி கழகச் செயலாளர் கவுன்சிலர் போஸ்முத்தையா, அவனியாபுரம் மேற்கு பகுதி கழக செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84-வது வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் குட்டி என்ற ராஜரத்தினம், சுபாஷ்சந்திர போஸ், சூரியவர்மன், கௌதம்போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் வரவேற்றனர்.

    திருமண விழாவில், பகவதி, ரமேஷ், 84-வது வட்ட துணைச் செயலாளர் விஜயன், அவனியாபுரம் தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் ஈஸ்வரன், 84-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், வில்லாபுரம் பகுதி செயலாளருமாமன போஸ் முத்தையா, பத்ரி பாண்டியன், பத்ரி சரவணன், விக்கி சதீஷ் பிரண்ட்ஸ் கிளப், முனிச்சாலை ஆண்டவர் பைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துெகாண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • வைகோ எம்.பி. நேரில் வாழ்த்தினார்.

    மதுரை 

    ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பாறைப்பட்டியை சேர்ந்த பால்ராஜ்-தீபா மகன் தினேஷ், கே.புளி யங்குளம் பூமிநாதன்- சுதா மகள் இந்துமதியின் திருமண விழா கருமாத்தூரில் உள்ள தனியார் மகாலில் நேற்று நடந்தது.

    இந்த திருமணத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உசிலம்பட்டி பகுதி எப்போதும் தாய்மாமனுக்கு மரியாதை செலுத்தும் பகுதி, இந்த திருமணத்திலும் தாய்மாமன்கள் மாலை களுடன் வந்து மணமக்க ளுக்கு மாலையிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    முல்லை பெரியாறு அணையை இடிக்க விடாமல் தடுப்பதற்காக நடைபயணம் சென்று அணையை காப்பாற்றி லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களை பாதுகாத்து கொடுத்ததில் வைகோவுக்கு பங்கு உள்ளதைப்போல, இந்த பகுதி மக்களுக்கும் பங்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த திருமண விழாவில் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், முனிய சாமி, மார்நாடு, ராம கிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் சக்திவேல், வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, உதயராஜ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பையா, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டி, மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
    • ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

    டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.

    பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் விமரிசையாக நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நேற்று (20-ந் தேதி) அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
    • நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டச் அ.தி.மு.க. செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    இதனை முன்னிட்டு நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மேலும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு விவசாயத்தை பாதுகாத்த எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் வருகை தருவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகளும், செயல் வீரர்களும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×